Posts

Showing posts from March, 2008

பயணம்

Image
அதிகாலை நேரம் 5 மணி, அதிர்ந்து கூவியது கைபேசி, அதன் அலறலை சிறிதே தாமதபடுத்தி, 5 மணி நேர தூக்கத்தை 5 நிமிடத்தில் தூங்க எண்ணினேன். கைபேசியின் அலறலை முழுதாய் அனைத்து விட்டு, ஆயத்தமானேன் இவ்வுலகை புதிதாய் எதிர் நோக்க. பாதி தூக்கத்தில் பல் துலக்கி, பரபரப்பாய் குளியலை முடித்து, பாசமாய் அன்னை தந்த உணவை பாதி மட்டும் உண்டு, பயணத்தை தொடங்கினேன் பரந்த இவ்வுலகில் என் பணி முடிக்க அலுவலக பேருந்தில். பார்த்த முகங்கள் ஆனால் பழகாத மனங்கள், அருகில் இருக்கும் அந்நியர்களுடன் பயணம். பாதியில் கலைந்த தூக்கத்தை பக்குவமாய் தொடரும் சிலர், பன்னலையின் பாடல்களில் மனதை தொலைக்கும் சிலர், தனக்கு பிடித்த பாடல்களின் தொகுப்பில் மனம் லயிக்கும் சிலர், நாளிதழ்களில், நாவல்களில் நல்லவற்றை தேடும் நல்லவர்கள் சிலர், குறுந்தகவல்களின் பரிமாற்றத்தில் சிலர், இவர்களின் மத்தியில் எனது இனிய அலுவலக பயணம் பேருந்தின் சைகை விளக்கின் சத்தத்தில் முடியும் அனைவரின் பயணம். உலகம் உருண்டை என்பதை மற்றும் ஒரு முறை உணர்த்தும் பேருந்து நிறுத்து தடம், அங்கே விடை பெரும் பேருந்து. நம்மிடம் உள்ள திறமையை உலக...