Posts

கண் தானம்

மரித்த பின், மண்ணிற்கு இல்லை, மனிதனுக்கு மட்டுமே என் கண்கள் மாறட்டும் மனிதனின் மனம் மறையட்டும் விழிகளின் இருள்

சஞ்சலம்

நீ சரியாத உடையை சரி செய்தபோது, நான். சாதாரணமாய் தானே இருந்தேன், சரிசெய்து, சஞ்சலபடுத்திவிட்டாய் என் மனதை. சரிசெய்து கொண்டிருக்கிறேன், சஞ்சலபட்ட என் மனதை. முடியும் என்ற மூடநம்பிக்கையில். ********************************************

அவன் - அவள்

Image
******************************** அவனால் மட்டுமே, அவளின் அனைத்தையுமே ரசிக்க முடியும் அவளிடம் மட்டுமே அவன் ரசித்த பின்னும் மிச்சம் இறுக்க முடியும், மீண்டும் ரசிக்க. ********************************

மழை

Image
விளைநிலங்கள் எல்லாம் வீடுகளாய் மலைகள் எல்லாம் மணல் மணலாய் மரங்கள் எல்லாம் மாயமாய் பின் மழை மட்டும் எப்படி? மனிதன் செய்யும் மாற்றம் இவை மழை மட்டும் விதிவிலக்கா மனிதன் மாறபோவதில்லை, மழை வரவேபோவதில்லை

நேற்று இன்று நாளை

********************************** நேற்று கனவுகள் மட்டும் இன்று முயற்ச்சிகள் மட்டும் நாளை வெற்றிகள் மட்டும்............ நேற்று நினைவுகள் மட்டும் இன்று நி மட்டும் நாளை நாம் மட்டும்............

நினைவுகள்

Image

பருவங்கள்

மழை -------- தோள் மட்டும் நனைக்கா குடையில் தோள் கொடுக்க நித்தம் நீ இருந்தால், மழையும் ஆனந்தமே கோடை -------- கோடையும் எனக்கு குளிர்கிறது உன் துப்பட்டா விசிறியினால் சரவணன்