Posts

Showing posts from 2008

காதல்

Image
என்னவளே எங்கு இருக்கிறாய், என்னை இங்கு காணவில்லை, கண் இமைக்கும் நேரத்தில் என்னை கவர்ந்தவளே என்னுள் காதல் வந்தஉடன் நீ ஏன் காணாமல் போனாய் காதல் விதைத்து காற்றாய் மறைந்தாய் நினைவில் என்னை நிலைகுலைய வைத்தாய் கனவில் என்னை கலங்க வைத்தாய் காரணம் தேடினேன், விழியின் ஓரம் ஒரு துளி சொன்னது காதல் என்று. நிலவின் ஒளியில், உன் நினைவின் அலைகள் என் இதயம் நனைத்து சென்றது, நிலவில்லா நாள் அமாவாசை அல்ல எனக்கு, உன்னை பார்க்காத நாள் மட்டுமே நினைக்கவில்லை காதல் வரும் என்று நினைக்கவில்லை கவிதை வரும் என்று நினைக்கவில்லை கண்ணிர் வரும் என்று நினைக்கவில்லை இவையாவும் வரும் உன்னை நினைத்தாள் என்று ஆசைதான் இப்படி காதல் கவிதை எழுத, எழுதி என்ன செய்ய, என்னிடம் காதலும் இல்லை கவர்ந்தவலும் இல்லை கவிதையும் இல்லை கண்ணீரும் இல்லை என்றும் காதலுடன், சரவணன்.

Chairman

Image
சேர்மன்(Chairman) ********************************************** பலருக்கு இது பதவியின் பெயர் எனக்கோ இது நட்பின் மறுபெயர் பதவியின் சுகத்தை விட இவர் நட்பில் ஆனந்தம் அதிகம் கோபம் எனும் வார்த்தையின் அர்த்தம் அறியாதவர் பிறர் இவர் மீது கோபத்தை உமிழ்ந்தாலும் பொறுக்கும் பூமி இவர் நம் துயரங்களில் தோல் கொடுக்கும் தோழர் இவர் கடமை கணியம் கட்டுப்பாடு எனும் காவல் துறையின் வாசகத்தை கணினி துறையிலும் கடைப்பிடிக்கும் கண்ணியவான் இவர் பிறரை பாசாங்கு செய்வதில்(கலாய்ப்பதில்) நாட்டம் இல்ல நல்லவர் இவர் நம்மை தான் இவர் பாசாங்கு செய்தார் (கலாய்த்தார்) என உணர இயலாத வகையில் நகைச்சுவை புரிவதில் கைதேர்ந்த நடிகர் இவர் கடவுள் எனகளித்த பரிசுகளில் நான் மிகவும் களித்த பரிசு, இவரின் நட்பும் ஒன்று தாய் தந்தைக்கு செல்ல மகனாக மனைவிக்கு மங்கள மணாளனாக தம்பிகளுக்கு நல்ல தமயனாக நண்பர்களுக்கு எல்லாமுமாக நீ நீ வேண்டுவது வேண்டும் முன் கிடைக்க வேண்டுகிறேன் இறைவனை என்றும் அதில் எனக்கான வேண்டுதல் ஒன்று வேண்டும், இன்னும் ஒரு பிறப்பு மீண்டும், அதில் உன் நட்பு என்றும் நட்புடன் நா...

பயணம்

Image
அதிகாலை நேரம் 5 மணி, அதிர்ந்து கூவியது கைபேசி, அதன் அலறலை சிறிதே தாமதபடுத்தி, 5 மணி நேர தூக்கத்தை 5 நிமிடத்தில் தூங்க எண்ணினேன். கைபேசியின் அலறலை முழுதாய் அனைத்து விட்டு, ஆயத்தமானேன் இவ்வுலகை புதிதாய் எதிர் நோக்க. பாதி தூக்கத்தில் பல் துலக்கி, பரபரப்பாய் குளியலை முடித்து, பாசமாய் அன்னை தந்த உணவை பாதி மட்டும் உண்டு, பயணத்தை தொடங்கினேன் பரந்த இவ்வுலகில் என் பணி முடிக்க அலுவலக பேருந்தில். பார்த்த முகங்கள் ஆனால் பழகாத மனங்கள், அருகில் இருக்கும் அந்நியர்களுடன் பயணம். பாதியில் கலைந்த தூக்கத்தை பக்குவமாய் தொடரும் சிலர், பன்னலையின் பாடல்களில் மனதை தொலைக்கும் சிலர், தனக்கு பிடித்த பாடல்களின் தொகுப்பில் மனம் லயிக்கும் சிலர், நாளிதழ்களில், நாவல்களில் நல்லவற்றை தேடும் நல்லவர்கள் சிலர், குறுந்தகவல்களின் பரிமாற்றத்தில் சிலர், இவர்களின் மத்தியில் எனது இனிய அலுவலக பயணம் பேருந்தின் சைகை விளக்கின் சத்தத்தில் முடியும் அனைவரின் பயணம். உலகம் உருண்டை என்பதை மற்றும் ஒரு முறை உணர்த்தும் பேருந்து நிறுத்து தடம், அங்கே விடை பெரும் பேருந்து. நம்மிடம் உள்ள திறமையை உலக...

காத்திருக்கிறேன்

Image
எந்த உருவத்தையும் நேசிக்கும் ஒரு உயிர் இவ்வுலகில் உண்டு, என்னை நேசிக்கும் ஒரு உயிருக்காக, காத்திருக்கிறேன்.

அதிசயம்!

Image
நிலவின் முகத்தில் சில சிவந்த நட்சத்திரங்கள்!!!! ஆம், என்னவளின் முகத்தில் பருக்கள்!!!

கூட்டணி

Image
பேருந்தில் நான், பக்கத்தில் நீ, தூரத்தில் நிலா :-) பேருந்தில் நான், பக்கத்தில் நிலா, தூரத்தில் நீ :-(

முதல் கிறுக்கல்

Image
நீ நிலா -------- இரவில் மட்டும் வரும் நிலவை போல, என் நினைவில் மட்டும் வரும் நிலவு நீ.