காதல்

என்னவளே எங்கு இருக்கிறாய்,
என்னை இங்கு காணவில்லை,
கண் இமைக்கும் நேரத்தில் என்னை கவர்ந்தவளே
என்னுள் காதல் வந்தஉடன் நீ ஏன் காணாமல் போனாய்
காதல் விதைத்து காற்றாய் மறைந்தாய்
நினைவில் என்னை நிலைகுலைய வைத்தாய்
கனவில் என்னை கலங்க வைத்தாய்
காரணம் தேடினேன்,
விழியின் ஓரம் ஒரு துளி சொன்னது காதல் என்று.
நிலவின் ஒளியில்,
உன் நினைவின் அலைகள்
என் இதயம் நனைத்து சென்றது,
நிலவில்லா நாள் அமாவாசை அல்ல
எனக்கு, உன்னை பார்க்காத நாள் மட்டுமே
நினைக்கவில்லை காதல் வரும் என்று
நினைக்கவில்லை கவிதை வரும் என்று
நினைக்கவில்லை கண்ணிர் வரும் என்று
நினைக்கவில்லை இவையாவும் வரும் உன்னை நினைத்தாள் என்று
ஆசைதான் இப்படி காதல் கவிதை எழுத,
எழுதி என்ன செய்ய,
என்னிடம்
காதலும் இல்லை கவர்ந்தவலும் இல்லை
கவிதையும் இல்லை கண்ணீரும் இல்லை
என்றும் காதலுடன்,
சரவணன்.
Comments