விடைகொடு நிலவே




காத்திருந்தேன், உன்னோடு சேர்ந்து நடப்பேன் என்ற நம்பிக்கையில்
விழித்திருந்தேன், என் விழியில் உள்ள உன்னை இருள் சூழும் என்று

நீ பார்க்காதபோது உனை ரசிக்க மனம் தோணியது,
அருகில் இருந்த உன்னை பார்க்க மனம் நானியது,
உன் பிரிவை எண்ணி மனம் பதறியது.

என் பலிக்கா பகல் கனவே, பளிச்சிடும் பகல் நிலவே
பக்கம் வராமல் பறந்து போனதேனோ, பாவி நான் செய்த பிழைதானோ

நிலவில்லாமல் கவிதை எழுத முயற்சிக்கிறேன், உன் நினைவில்லாமல் வாழவும்.
விடைகொடு நிலவே, விட்டுவிடு நிலவே, வழிகொடு நிலவே
சிரிக்கசெய்கிறது என் வீண் முயற்சி
விழியின் ஓரம் கண்ணீரின் சிறு பயிற்சி....................

சரவணன்.

Comments

Popular posts from this blog

காதலை சொல்லாதவன்