Posts

Showing posts from 2009

மழை

Image
விளைநிலங்கள் எல்லாம் வீடுகளாய் மலைகள் எல்லாம் மணல் மணலாய் மரங்கள் எல்லாம் மாயமாய் பின் மழை மட்டும் எப்படி? மனிதன் செய்யும் மாற்றம் இவை மழை மட்டும் விதிவிலக்கா மனிதன் மாறபோவதில்லை, மழை வரவேபோவதில்லை

நேற்று இன்று நாளை

********************************** நேற்று கனவுகள் மட்டும் இன்று முயற்ச்சிகள் மட்டும் நாளை வெற்றிகள் மட்டும்............ நேற்று நினைவுகள் மட்டும் இன்று நி மட்டும் நாளை நாம் மட்டும்............

நினைவுகள்

Image

பருவங்கள்

மழை -------- தோள் மட்டும் நனைக்கா குடையில் தோள் கொடுக்க நித்தம் நீ இருந்தால், மழையும் ஆனந்தமே கோடை -------- கோடையும் எனக்கு குளிர்கிறது உன் துப்பட்டா விசிறியினால் சரவணன்

எல்லாம் அழகாய்

Image
=========================================== உன்னோடு சேரும் எல்லாம் அழகாய் தெரிகிறது எனக்கு கறுங்கூந்தல் வென்மல்லிகை காந்தவிழியன் இருண்ட கறு-மை நிலவுக்குள் நட்சத்திரமாய் உன் சிறிய திலகம் காதோடு கவி பாடும் தொங்கட்டான் மெல்லிய உதட்டில் சிந்திடும் சிரிப்பு மென்மையான கன்னத்தின் சிவப்பு நீண்ட கரத்தின் கண்ணாடி வலை சங்குகழுத்தின் முத்து மாலை மனம் சருக்கிடும் மாரோடு மாராப்பு இதோ நானும் என்றது இடை கொசுவம் பூமி தொடும் பாதத்தின் சதங்கைகள் இப்படி எல்லாம் அழகாய்... இணைய வேண்டும் நானும் உன்னோடு நான் அழகாய் தெரிய அல்ல, உன் அழகின் திரிஷ்டி பொட்டாய், உன் கன்னத்தின் ஓரத்தில்.... என்றும் உன்னோடு ===========================================

காதலை சொல்லாதவன்

============================================ கரை தாண்டி வர துடிக்கும் என் காதல் உன் கண்கள் பார்த்து அடங்குவதே அதன் தேடல் பல நாள் சுனாமியாக மாற அது எத்தனிக்கும் சில பின்விளைவை எண்ணியே மனம் தத்தளிக்கும் எரிமலைக்குள் ஓடும் தீக்குழம்பாய் என் காதல் வெளி வரும் வழி தெரியாமலே, உறைந்தே போனது. யார் சொன்னது, நான் காதலிக்கவில்லை என்று நான் காதலை சொல்லாதவன். --------------------------------------------

கிறுக்கல்கள்

நான் செய்த முதல் தவறு, உன்னை நேசித்தது. அடுத்த அடுத்த தவறுகள் முதல் தவறை திரும்ப திரும்ப செய்தது...........

விடைகொடு நிலவே

Image
காத்திருந்தேன், உன்னோடு சேர்ந்து நடப்பேன் என்ற நம்பிக்கையில் விழித்திருந்தேன், என் விழியில் உள்ள உன்னை இருள் சூழும் என்று நீ பார்க்காதபோது உனை ரசிக்க மனம் தோணியது, அருகில் இருந்த உன்னை பார்க்க மனம் நானியது, உன் பிரிவை எண்ணி மனம் பதறியது. என் பலிக்கா பகல் கனவே, பளிச்சிடும் பகல் நிலவே பக்கம் வராமல் பறந்து போனதேனோ, பாவி நான் செய்த பிழைதானோ நிலவில்லாமல் கவிதை எழுத முயற்சிக்கிறேன், உன் நினைவில்லாமல் வாழவும். விடைகொடு நிலவே, விட்டுவிடு நிலவே, வழிகொடு நிலவே சிரிக்கசெய்கிறது என் வீண் முயற்சி விழியின் ஓரம் கண்ணீரின் சிறு பயிற்சி.................... சரவணன்.