எல்லாம் அழகாய்

===========================================
உன்னோடு சேரும் எல்லாம் அழகாய் தெரிகிறது எனக்கு
கறுங்கூந்தல் வென்மல்லிகை
காந்தவிழியன் இருண்ட கறு-மை
நிலவுக்குள் நட்சத்திரமாய் உன் சிறிய திலகம்
காதோடு கவி பாடும் தொங்கட்டான்
மெல்லிய உதட்டில் சிந்திடும் சிரிப்பு
மென்மையான கன்னத்தின் சிவப்பு
நீண்ட கரத்தின் கண்ணாடி வலை
சங்குகழுத்தின் முத்து மாலை
மனம் சருக்கிடும் மாரோடு மாராப்பு
இதோ நானும் என்றது இடை கொசுவம்
பூமி தொடும் பாதத்தின் சதங்கைகள்
இப்படி எல்லாம் அழகாய்...
இணைய வேண்டும் நானும் உன்னோடு
நான் அழகாய் தெரிய அல்ல,
உன் அழகின் திரிஷ்டி பொட்டாய்,
உன் கன்னத்தின் ஓரத்தில்.... என்றும் உன்னோடு
===========================================
Comments